கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான கழிவறையை சுற்றி கருவேல மரக் கிளைகளும், முள் செடிகளும், சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அதனை சுத்தம் செய்து விஷ ஜந்துக்கள் நடமாட்டம் சம்பந்தமான அச்சத்தை மாணவர்களுக்குப் போக்க வேண்டும் என்பதை தங்களது கோரிக்கையாகவும், பள்ளியின் முகப்புப்பகுதியில் பள்ளி சம்பந்தமான எந்த ஒரு பெயர் பலகையும் இல்லாமல் இருக்கிறது, இங்கு பள்ளியின் பெயர், கிராமத்தின் பெயர் இவை அடங்கிய பெயர் பலகை வைக்கவும், இங்கு படிக்கும் சுமார் 150 மாணவர்களுக்கு அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு தகுந்தபடியிலான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்குமாறும் கூறி இப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment