கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தலைக்குளம் கிராமத்தில் 81 அடி உயரம் கொண்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெட்காளி அமமன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விழா சில நாட்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் தினமும் வெட்காளி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஸ்ரீ தாண்டவராயன் சுவாமிக்கும், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபோகம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. திருக்கல்யாண வைபோகத்தை முன்னிட்டு யாக குண்டம் வளர்க்கப்பட்டு, பல்வேறு மந்திரங்கள் முழங்க, கோடானு கோடி தெய்வங்கள் சாட்சியாக ஸ்ரீ தாண்டவராயன் சுவாமிக்கும் - ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் பக்தர்களாலும் தேவர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமாங்கல்யத்தை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபோகத்தின் நிறைவில் மகா தீபாராதணை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment