பரங்கிப்பேட்டையில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 June 2024

பரங்கிப்பேட்டையில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர் அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பினராக பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பின்னர் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால் பழம் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர்.பேரூராட்சி மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ்முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன் முனவர் உசேன் பரங்கிப்பேட்டை வட்டாரப் தொழில் வர்த்தக சங்கம் தலைவர் ஆனந்தன். நகர இளைஞரணி அமைப்பாளர் ஜாபர் ஷெரீஃப்.திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கலீல்திமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


- செய்தியாளர் சாதிக் அலி

No comments:

Post a Comment

*/