புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 June 2024

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைக்கு எதிரான உறுதிமொழி மற்றும் கள்ளச்சாராயம் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து மீண்டும் பள்ளியில் முடிவுற்றது  இதில் மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் கள்ளச்சாராயம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்  இதில் பள்ளி ஆசிரியர்கள் சேரமான் ரமேஷ் கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர் உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார் புவனகிரி காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் மற்றும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தமிழரசன் ஆகியோர் பேரணியை பாதுகாப்புடன் வழி நடத்தினர் இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/