கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மூன்று மாணவர்கள் நடந்து முடிந்த நீட் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் பயின்ற அஸ்வினி என்ற மாணவி 666 மதிப்பெண்ணும் பெற்றும் இளம் பாரதி என்ற மாணவி 655 மதிப்பெண்ணும் பவித்ரா என்ற மாணவி 620 மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படித்துள்ளனர்.
நீட் தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி பெற்று வருங்கால மருத்துவராகபோகும் தம் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி மாணவர்களையும் பெற்றோர்களையும் கௌரவித்தது . நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நினைவு பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் டாக்டர். வினோத் கண்ணன் மற்றும் டாக்டர். ஞான விநாயகன் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். பள்ளியின் சீனியர் பிரின்ஸிபல் இப்ராஹிம் ஷெரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment