கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேல் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(34). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவரின்கணவர் சந்தோஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறுகின்றனர்.
எந்த வேலைக்கும் செல்லாமல் போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது, இதனால் மன உளைச்சலும், வேதனையும் அடைந்த மனைவி முத்துலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியின் கொக்கியில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து இறப்புக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment