சிதம்பரம் கோவிந்த ராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம எதிர்க்கும் தீட்சிதர்களை கண்டித்து அரை நிர்வாண நூதன போராட்டம் நடத்திய தெய்வீக பக்தர்கள் பேரவையினர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 June 2024

சிதம்பரம் கோவிந்த ராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம எதிர்க்கும் தீட்சிதர்களை கண்டித்து அரை நிர்வாண நூதன போராட்டம் நடத்திய தெய்வீக பக்தர்கள் பேரவையினர்


சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த மறுப்பு தெரிவித்து வரும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களை கண்டித்து பிரமோற்சவம் நடத்த தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் அரை நிர்வாண நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


சைவ வைணவ பாகுபாட்டை மறந்து தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த பொது தீட்சிதர்கள்  முழு ஒத்துழைப்பு வழக்க வேண்டும் என்று வலியுறுத்தி தெய்வீக பக்தர்கள் பேரவையினர் தங்களது உடம்பில் சைவ வைணவ சமயங்களின் அடையாளமாக விளங்கும் திருநாமம் திருநீர் பட்டை பொட்டு வைத்துக் கொண்டு தீட்சிதர்களை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா தலைமை வகித்தார்.


தெய்வீக பக்தர்கள் பேரவை மாநில துணைத் தலைவர் ஆர் சம்பந்த மூர்த்தி வரவேற்றார், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் ஊடகப்பிரிவு தலைவருமான  ராஜா. சம்பத்குமார்  தெய்வீக பக்தர்கள் பேரவை மாநில துணைத் தலைவரகள் ஜி ஆறு முகம்  குமராட்சி ரங்கநாதன் பி.செல்வகுமார்  ஸ்டீபன் முத்துப்பாண்டி மாநில பொதுச் செயலாளர்கள் வேல்முருகன் ரகோத்தமன்   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவப்பு அழைப்பாளர்களாக நகர் மன்ற உறுப்பினரும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவருமானதில்லை ஆர். மக்கின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் கடலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சேகர்  விடுதலை சிறுத்தைகள் கடலூர்மாவட்ட செயலாளர் தமிழ் ஒளி நகர செயல் தலைவர் தில்லை. கோ.குமார் கீரப்பாளையம் வட்டாரத் தலைவர் செழியன் மாவட்ட துணை தலைவர் ஆர்.வி.சின்ராஜ் ஆட்டோ குமார் ஜி.கே குமார் டி. பட்டாபிராமன் சண்முகசுந்தரம் கலைப்பிரிவு தலைவர் கே என் நாராயணசாமி ஓ.பி.சி அணி தலைவர் பாலகிருஷ்ணன் மகளிர் அணி  தலைவி அமுதா ராதா ஜனகம் இந்திரா  வழக்கறிஞர் கம்சலா கண்ணையன் ஸ்ரீராம் அஜ்மீர்அ ஆனந்த் முகேஷ் ரகுமான் இர்ஃபான் தனுஷ் அனாஸ் உட்பட மற்றும் பல கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தெய்வீக பக்தர்கள் பேரவை மாநில பொது செயலாளர் ஏ ராஜசேகர் நன்றி கூறினார், முன்னதாக  தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழக்க வேண்டும் என்று  சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை மடி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன் 

No comments:

Post a Comment

*/