கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல மூங்கிலடி அரசு பள்ளியில் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் வெள்ளி நாணயம் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி தலைவர் சேஷாத்ரி செயலாளர் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர் வி பி மருத்துவர் கதிரவன் வெள்ளி நாணயம் வழங்கினார் மேலும் புதியதாக இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக அவர்களுக்கு கிரீடம் அணிந்து மாலை அணிவித்து வரவேற்பு தரப்பட்டது.
மேலும் இயற்கையை பாதுகாக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் ரோட்டரி சங்கத்தினர் ராஜசேகரன் கிருஷ்ணராஜ் சந்தோஷ் அருள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலா அருணாச்சலம் மற்றும் ஆசிரியர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment