கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக மாதம் ஒரு முறை திருவண்ணாமலை கிரிவலத்திற்காக அரசு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது இந்த பேருந்து இன்று காலை 10.30 மணிக்கு பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி செல்வதற்காக வந்தபோது பரங்கிப்பேட்டை பயணியர் நல சங்கம் சார்பில் சங்க தலைவர் டாக்டர் கோ.அருள் முருகன் MC அவர்கள் தலைமையில் சங்க நிர்வாகிகள் ஹசன் முஹம்மது மன்சூர்.உமர் பாரூக்.அர்சாத்.மெஹராஜ். திருஞானம். ஆட்டோ பாலமுருகன். வினோத் ஆகியோர் முன்னிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசுக்கும் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் பரங்கிப்பேட்டை பயணியர் நல சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர், இந்த சிறப்பு பேருந்து மே மாதம் 22 ஆம் தேதி பரங்கிப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் சென்றது குறிப்பிடப்பட்டது
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment