நேரடியாக 50 ஆயிரம் ஏக்கரும், மறைமுகமாக 50 ஆயிரம் ஏக்கரும் என மொத்தமாக சுமார்ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாசனம் தந்து வரும் வீராணம் ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை வறண்டு போன நிலையில் காணப்பட்ட வீராணம் ஏரி, தற்போது அதன் முழு கொள்ளளவை நெருங்கி கடலைப் போல காட்சியளிப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் விவசாயிகள் போர்வெல், மற்றும் மழைநீர் மூலம் பாசனம் பெற்று வந்தாலும், பயிர் செய்து வரும் விவசாய பயிர்களுக்கு பாரம்பரிய சாகுபடி முறையான ஏரி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி பாசனம் செய்யும் போது விவசாய பயிர்களில் நோய் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் பெருமிதத்தோடு தெரிவித்து வருகின்றனர். உடனடியாக ஏரியின் உபரி நீரை அனைத்து பாசன வாய்க்கால்களிலும் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ளவீராணம் ஏரி தற்போது தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரியின் மொத்தநீர்மட்டம் 47.50 அடியில் தற்போது 47.20 அடியைத் தொட்டு அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து 950 கன அடியாக இருந்து வருகிறது. சென்னை குடிநீருக்கு சராசரியாக 70 கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் உபரி நீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment