சேத்தியாத்தோப்பு அருகே கிராம நிர்வாக உதவியாளர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழப்பு .போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 June 2024

சேத்தியாத்தோப்பு அருகே கிராம நிர்வாக உதவியாளர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழப்பு .போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியின் பூதங்குடிப் பகுதியில் வெள்ளியக்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வரும் மோகன் (49) என்பவர் ஏரியில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் இறந்த மோகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த மோகன் அருகில் உள்ள பொன்னங்கோவில், பரதூர் சாவடி, பரதூர் ஆகிய கிராமங்களின் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏரிப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக வந்தவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது. இது குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/