கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயத்தில் பத்து நாட்கள் உற்சவ திருவிழா ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை 7 தேதி காப்பு அணிவிக்கப்பட்டு உற்சவ திருவிழா நடைபெற்று வந்தது இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீரற்று விழா நடைபெற்றது இளைஞர்கள் மகளிர்கள் கிராம பொதுமக்கள் தன் உறவுக்காரர்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றி உற்ச்சாகமாக விளையாடினார்கள் பிறகு அம்மன் ஆலயத்தை நோக்கி சக்தி கரகத்துடன் வந்து நாட்டாமைக்காரர்களால் அணைவர் மீதும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டடு வானவேடிக்கை நடைபெற்று ஆடிய உடன் அம்மன் ஊஞ்சலில் இறக்கி வைக்கப்பட்டு தாலாட்டு நிகழ்வு ஆனது நடைபெற்றது அதன் பிறகு தீபார்தாரனை காண்பிக்கப்பட்டது 500 மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு தரிசித்தனர் இதில் மகளிர் அணைவரும் மஞ்சள் நிற சேலை அணிந்து ஒன்று கூடி கும்மியடித்து இறுதியாக நிகழ்ச்சி நிறைவு பெற்றது
- தமிழ குரல் இணையதள செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment