கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சின்னநெற்குணம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் முகப்பில் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பூரணி புஷ்கலாம்பிகை சமேத ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ புத்துமாரியம்மன், ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி ஆகிய கோவில்கள் அமைந்துள்ளது. இவற்றிற்கு புனரமைப்புப் பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடத்திட கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நடைபெற்ற விழாவில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புனித நீர் கலசங்களுக்கு யாகசாலையில் நான்கு காலங்கள் பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர் கலசங்கள் கோவில்களின் கோபுரங்களின் மேல் கொண்டு செல்லப்பட்டு மகா மந்திரங்கள் முழங்க கோபுரக்கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு நான்கு கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை பக்தி கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment