சேத்தியா தோப்பு அருகே கோதண்டவிளாகத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் 14 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 June 2024

சேத்தியா தோப்பு அருகே கோதண்டவிளாகத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் 14 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கோதண்டவிளாகம் கிராமத்தில் வடக்குத் தெருவில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விழாவானது கடந்த ஆனி  ஐந்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனையடுத்து தினமும் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள், புராண இதிகாச பாரதம் தொடங்கி, தர்மர் பிறப்பு, திருக்கல்யாணம், சுவாமி ஊர்வலம் எனவழிபாடுகள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலையில் அரவான் கடபலி வெட்டுதல் பூஜைகள் நடைபெற்று, மாலையில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றிட காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் கிராம ஒற்றுமைக்காகவும், நேர்த்திக்கடன் வேண்டுதலை நிறைவேற்றிடவும் வேண்டி தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் . இந்த தீமிதி திருவிழாவினைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விழாவினை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


தொடர்ந்து இக்கோவில் விழாவானது மஞ்சள் நீராட்டு விழா, சாகை ஊற்றுதல், பட்டாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. 

No comments:

Post a Comment

*/