கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக இரண்டாம் ஆண்டு கத்னா எனும் சிறுவர்களுக்கான சுன்னத் செய்யும் முகாம் நேற்று நடைபெற்றது இந்த முகாமினை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக H.M.H.பள்ளி முத்தவல்லியும், தொழிலதிபருமான ஹாஜி H.M. ஹனிபா சாஹிப் அவர்கள் கலந்து கொண்டு இம்முகாமை துவக்கி வைத்தார் ஜமாஅத் நிர்வாகிகள் மியாஜி, ஷேக் அலாவுதீன், சாஹூல் ஹமீது, ஹபிபுல்லாஹ், அப்துல் ஹமீது, நூர் அலி, ஹூசைன், முஹம்மது ஷேக் ஆதம், ஆரீப், செய்யது, முஹம்மது செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜமாத் முன்னால் பொது செயலாளர் ஹமீது கவுஸ், ஜித்தா PMA தலைவர் அஸ்கர் அலி, நூர் ஷா அலி.A.கலீல் அஹமத் பாகவி மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் 60க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment