கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மீராபள்ளி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் LEAP (எ) LEARNING & EDUCATIONAL ACADEMY OF PORTONOVO சார்பில் 10.+1.+2 வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது நிகழ்ச்சியினை A.முஹம்மது இலியாஸ் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு பசுமை ஹாஜி அவர்கள் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியை ஹமீது மரைக்காயர் அவர்கள் தொகுத்து வழங்கினார், முஹம்மது தாஹா அவர்கள் விளக்க உரையாற்றினார் அப்துல் ரஹ்மான் அவர்கள் அறிமுக உரையாற்றினார் LEAP நிர்வாகிகள் அலி அப்பாஸ். அகமது யாசின்.ஹாஜி அலி.முஹம்மது கவுஸ் (ஜாஸ்மின்). கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பினராக பரங்கிப்பேட்டை கலீல் பாகவி அவர்கள் மற்றும் கல்வி ஆலோசகர் S.சித்திக் M.Tech அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்க வேண்டும் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என்னென்ன குறைந்த செலவில் சிறந்த படிப்புகளை பெற என்ன வழி பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள் எது என்று விளக்கி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் யாசின் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment