காட்டுமன்னார்கோவில் அருகேவீடு தீப்பிடித்து எரிந்ததால் பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் எரிந்து நாசம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 May 2024

காட்டுமன்னார்கோவில் அருகேவீடு தீப்பிடித்து எரிந்ததால் பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் எரிந்து நாசம்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் வசித்து வருபவர் காசிநாதன். நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் காசிநாதன் குடியிருந்து வரும் கூரை வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த காசிநாதன் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

பின்னர் தீயைஅணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் கூரை வீடு  முழுவதும் எரிந்து சாம்பலானது.  இதில் வீட்டில் இருந்த ஆறு பவுன் நகை, 1.5 லட்சம் பணம், குடும்ப அட்டை, பள்ளி, கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு, வீட்டுப் பத்திரம்,  பித்தளை சாமான்கள், பீரோ, கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக தெரிவித்தனர்.


தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மமான முறையில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

*/