கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு சேப்பளா நத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ உத்ரா பதீஸ்வரர் ஆலய சிறுதொண்ட நாயனார் அமுது படையல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவபெருமான் ஆகிய ஈஸ்வரனுக்கு படையளாக தாங்கள் பெற்ற ஒரே மகனான சீராளனை உணவாக அளித்த தம்பதியினருக்கு மீண்டும் சீராளனை உயிர்ப்பித்து தோற்றுவித்தார் சிவபெருமான் இதனை ஆண்டுதோறும் நினைவு கூறும் வகையில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் வரும் அம்மாவாசை அன்று வடக்கு சேப்ளா நத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ உத்ரா பதீஸ்ஸ்வரர் ஆலயத்தில் சிறுதொண்டை நாயனார் அமுதுபடையில் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது, தொடர்ந்து ஐந்து நாள் நடைபெறும் விழாவின் நான்காம் நாளான இன்று நூற்றிற்கும் மேற்பட்ட மூலிகைகளால் செய்யப்பட்ட சீராளன் உருவம் பொம்மை பல்லக்கில் ஊர்வலமாக கோவில் வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது பின்னர் வடக்கு சேப்பலாநத்தம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை நோக்கி வந்தடைந்தது, பின்னர் ஈஸ்வரனுக்கு சீராளின் தலையை வெட்டி படையல் இட்டதை நினைவு கூறும் வகையில் சிவாச்சாரியார்கள் சீராளன் உருவம் பதித்த மூலிகைகளால் செய்யப்பட்ட சீராளனை தலையை வெட்டி படையலிட்டனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள உத்திராபதீஸ்வரருக்கு சிறப்பான தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னாபிஷேகம் மற்றும் மூலிகை உருண்டை இந்த நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டது
இதனை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் முழங்காலிட்டவாறு தங்கள் மடிப் பிச்சையாக சிவாச்சாரியார்களிடம் பெற்றுக் கொண்டனர்.
மேலும் கோவிலுக்கு வரும் தம்பதியினர் தெரிவிக்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இங்கு சீராளன் அமுது படையல் அன்று வழங்கப்படும் மூலிகை பிரசாதத்தை உட்கொண்டால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறப்பது மிகவும் சிறப்பு எனவும் இதற்கு நேர்த்திக்கடனாக குழந்தை பிறந்தவுடன் தங்கள் கைக்குழந்தையுடன் கோவிலுக்கு வரும் தம்பதியினர் தங்களின் குழந்தையின் எடைக்கு நிகராக தங்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதலை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
பின்னர் சீராளனுக்கு ஈஸ்வரன் உயிர் அளித்தது போல் ஐந்து வயது சிறுவன் ஒருவனுக்கு சீராளன் போல் வேடம் அணிந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் மத்தியில் காட்சிப்படுத்தினர், இந்நிகழ்வில் சுமார் 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062
No comments:
Post a Comment