புவனகிரியில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 13 May 2024

புவனகிரியில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம், புவனகிரியில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செல்வகுமார் வரவேற்றார் இதில் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் பங்கேற்று பழனிச்சாமி பெயருக்கு அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிஎன் சிவப்பிரகாசம் சீனிவாசன் விநாயகர் மூர்த்தி கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இதில் தலைமை கழக பேச்சாளர் முருகமணி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி அதிமுக கவுன்சிலர்கள் ரெங்கநாதன் பாலமுருகன் ரேவதி இளங்கோ ஜெயப்பிரியா ரகுராமன் மற்றும் கட்சியினர் கேபிடி இளஞ்செழியன் சுகந்தி ஆசைத்தம்பி சரவணன் மனோகர் வெற்றிவேல் ஆவின் கார்த்திக் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/