கடலூர் மாவட்டம் வடலூர் நகர பகுதியில் பழங்களை வைத்து தயாரிக்கப்படும் பிரஸ் ஜூஸ் கடைகள் பல இயங்கி வருகின்றது.
கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 104 டிகிரியை தாண்டி வெயில் சதம் அடித்து வரும் சூழலில் கடும் வெயிலிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஜூஸ் கடைகளை நாடி வருகின்றனர் இந்நிலையில் பழங்களை வைத்து தயாரிக்கப்படும் ஜூஸ் கடைகளில் சுகாதாரமற்ற முறை பின்பற்றப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சாறு எடுக்கப்பட்ட பழங்களின் கழிவுகள் அனைத்தும் முறையாக அகற்றப்படாமல் அதனை சுற்றி ஈக்கள் மொய்த்த வாறு காணப்படுகிறது எனவும் இந்த ஈக்கள் மொய்க்கும் பழச்சாறுகளை பொதுமக்கள் அருந்துவதால் நோய் தொற்று பரவும் அவல நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல கடைகளில் ஒரு பகுதியில் லேசாக அழுகிய உள்ள பழங்கலை நல்ல நிலையில் உள்ள பழங்களுடன் சேர்த்து கடைக்காரர்கள் பிரஸ் ஜூஸ் தயாரித்து வருவதாக தெரிவிக்கின்றனர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதன் மீது கவனம் கூர்ந்து பொதுமக்களின் நலன் கருதி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பிரஸ் ஜூஸ் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடவடிக்கை மேற்கொள்ளுமா உணவு பாதுகாப்பு துறை என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment