கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நூறடி ஆழ கிணற்றுக்குள் இருந்து வரும் ஸ்ரீசெல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டுஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழாதுவங்கியது.
புதன்கிழமை 100 அடி ஆழ கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்ரீ செல்லியம்மன் கிராமத்தில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய நிலையில் இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் தேரில் அமர்ந்து வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவின் இறுதியில் தேரில் இருந்து இறக்கப்பட்ட ஸ்ரீ செல்லியம்மன் மீண்டும் 100 அடி ஆழ கிணற்றுக்குள் வைக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அம்மன் வெளியே வரும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பின்னர் கிணற்றுக்குள் அம்மன் வைக்கப்பட்ட பிறகு கிணற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் பக்தர்களின் மேல் தெளிக்கப்பட்டது கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக இந்த விழா மருதூர் கிராம மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment