கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் உள்ள ஒரு ஹோட்டலில் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர்(36) என்பவர் சப்ளையராக வேலை செய்து வருகிறார். அந்த ஹோட்டலில் புவனகிரி சுத்துக்குழிப் பகுதியில் தங்கியிருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் (26) என்பவர் அதிக மது போதையில் தள்ளாடியவாறு வந்தவர் ஹோட்டல் சப்ளையரிடம் பரோட்டா பார்சல் வாங்கிக் கொண்டு அதற்கு பணம் தராமல் செல்ல கடைக்காரர்கள் காசு கேட்க போதை ஆசாமி அதற்கு காசு தராமல் மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருடன், வந்த போலீஸார் அருண்குமாரிடம் வம்பு பண்ணாமல் வாங்கிய பரோட்டாவிற்கு காசு கொடுத்து விட்டு செல் என்று கூறிய போது அருண்குமார் முன்னுக்குப் பின் முரணாக மதுபோதையில் தள்ளாட்டத்துடன் போலீசாரிடமே, மிரட்டல் விடுத்து நீ என்ன கேட்கிறது? எனக் கூறியவாறு சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை நோக்கி கையை உயர்த்த உடன் வந்த ஒரு போலீஸ்காரரையும் வாய்க்கு வந்தபடி பேச அருண்குமாரை லாவகமாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை செய்து, முடிவில் ஹோட்டல் சப்ளையர் அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment