நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 May 2024

நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25 ல் உள்ள தொ.மு.சா அலுவலகத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது, நெய்வேலி தொழிலாளர்  முன்னேற்ற சங்க தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுசெயலாளர் பாரி தலைமையில் நடைபெற்ற விழாவில்  முன்னதாக அலுவலகத்திற்கு முன்பு உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் பேரணியாக சென்று பெரியார், அண்ணா கலைஞர் ஆகிய தலைவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புதிய அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்தனர் தொடர்ந்து நெய்வேலி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுமக்களின் தாக்கத்தை போக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.                                               


- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.

No comments:

Post a Comment

*/