கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காசிநாதன் என்பவரது வீடு தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள், ஆவணங்கள் முழுவதும் கருகி சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கினார்.
இதில் அதிமுகவின் மேற்கு ஒன்றியச்செயலாளர் சிவக்குமார், அதிமுக ஒன்றியக் கவுன்சி
லர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment