கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆசியா கண்டத்திலே வேறெங்கும் நடைபெறாத வினோத திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 May 2024

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆசியா கண்டத்திலே வேறெங்கும் நடைபெறாத வினோத திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் டு திருச்சி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை ஓரம் காட்டுமன்னார்கோயில் வட்டம் நந்திமங்கலம் கிராமத்தில்  எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நல்லம்மா காளியம்மன் திருக்கோவில் ஆசியா கண்டத்திலே வேறெங்கும் நடைபெறாத குறவஞ்சி என்கிற வினோத திருவிழா மூன்று நான்கு தலைமுறைக்கு மேல் இந்தத் திருவிழா ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில்  குறவன் குறத்தி போலீஸ் வெட்டியான் கருப்பு மையை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு இடுப்பில் சலங்கை கையில் ஒரு ஈட்டியும் வேடம் அணிந்திருப்பார்கள் ஊர் நான்கு புறம் எல்லைகளை மிதித்து குறத்தி உடன் ஆடிப்பாடி இந்நிகழ்வு நடைபெறும் இதைக் காண இதைக் காண 10 ஆயிரம் மேற்பட்ட சுற்றி உள்ள கிராம மக்கள் காண தரிசிக்க வருவார்கள்.


அப்போது குறவஞ்சி ஓடி வரும்போது  அரை சிங்ககே ஒரு அலறல் சத்தம் இடும்போது திகில் ஊட்டும் அச்சத்தில் பொதுமக்கள் இருப்பார்கள் அதே சமயத்தில் இதை காண மகிழ்வோடும் இருப்பார்கள் கடைசியாக கோவில் மணி அடித்தவுடன் கோவிலுக்குள் சுற்றி வந்து அவர்களுக்கு மாங்காய் கொடுக்கப்படும் இந்த மாங்காவை கடித்து சாப்பிடுவார்கள் மாங்காய் துண்டை குழந்தை பாக்கியம் இல்லாத ஜோடிகள் மடியேந்தி வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம் மேலும் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்தால் அவர்கள் மீது தன் கறி மையினை பூசி விளையாடுவார்கள் கடைசியாக ஏழு வெள்ளை கோடு இட்டு ஈட்டியை தாண்டி சென்று குளியலுக்கு செல்வார்கள் பிறகு மஞ்சள் நீர் தீர்த்தம் அனைத்து பொதுமக்கள் மீதும் தெளிக்கப்படும் இத்துடன் இந்த நிகழ்வு நிறைவடையும் இந்த திருவிழா தொடர்ந்து மே மாதம் தமிழ் வைகாசி 1 மாதம் காப்பு அணிவிக்கப்பட்டு 12 நாள் தொடர்ந்து வருடா வருடம் நடைபெற்று வருகிறது.


- தமிழக குரல் இணையதள செய்தியாளர் P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/