கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பி.முட்லூர் ஆணையாங்குப்பம் கிராமத்தில் ஆவட்டி ஜே எஸ் ஏ கல்லூரி வேளாண் மாணவர்கள் நடத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முகாம் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் லட்சுமணன் தலைமையில் சிறப்பு பயிற்சியாளர்கள் பிரிதிராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி சுந்தரவடிவு திட்ட பொறுப்பாளர்கள் நவீன்குமார் பிரிதிராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முகாம் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி வார்டு கவுன்சிலர் பழனிவேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
மேலும் இதில் வாழை நெல் மணிலா போன்ற பயிர்களை தாக்கும் பூச்சிகளைப் பற்றிய அறிவுரை வழங்கப்பட்டது முகாமில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர்
No comments:
Post a Comment