கராத்தேவில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டி. மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 May 2024

கராத்தேவில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டி. மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

கராத்தேவில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டி  ஜூனியர் மாணவர்களுக்கு மே மாதம் 21 முதல் 26ஆம் தேதி வரை  மகாராஷ்டிரா மாநிலம்  புனேவில்  உள்ள  சத்திரபதி சிவாஜி  இண்டோர்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டி.  லைட் காண்டாக்ட், பாயிண்ட் ஃபைட்,லோகிக். லைட், காண்டக்ட் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட அமைச்சூர்   கிக் பாக்சிங்   மாணவர்கள்  சென்சாய். வி. ரெங்கநாதன்  தலைமையில்  தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் அணியுடன் இணைந்து அகில இந்திய அளவில் மாணவர்கள் வெற்றி பெற்றனர். 


இப்போட்டியில்   லைட் காண்டக்ட்  மற்றும் பாயின்ட்ஃபைட் பிரிவில்  கடலூர் மாவட்ட மாணவர்கள். பி. கிரித்திஷ் முதல் பரிசும், லைட்  கான்டெக்ட் பிரிவில். வி.முகுந்தன் இரண்டாம் பரிசும், லோகிக் பிரிவில்  மாணவி. எம் எஸ்.ஆதிரசகானா மூன்றாம் பரிசும். பெற்று தமிழகத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப் போட்டியில் தேசிய நடுவராக. ஆர்.ரவிக்குமார்   தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


வெற்றி பெற்ற மாணவர்களை  தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்க தலைவர் சுரேஷ் பாபுவும், கடலூர் மாவட்ட  வீருகிபாக்ஸிங் சங்கத் தலைவர்  சென்சாய். வி. ரங்கநாதன், செயலாளர். பி. சத்யராஜ், பயிற்சியாளர் சுபாஷ், பிரத்தியூனன், டீம் மேனேஜர் திவ்யா, ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment

*/