கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீசெல்லியம்மன் கோவில் விழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டி கோவிலின் பூசாரி தீ மிதித்தலுடன் ஆரம்பித்தது கோவிலின் விழா. பின்னர் தினமும் பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஆண்டு முழுவதும் 100 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் இருக்கும் ஸ்ரீ செல்லியம்மன் கிணற்றிலிருந்து இன்று மேலே கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இரண்டு நாட்கள் மட்டும் பக்தர்கள் வழிபாட்டுக்காக பூமிக்கு மேலே வைத்து வழிபாடு செய்யப்படும் ஸ்ரீ செல்லியம்மன் நாளை காலை தேரில் ஊர் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி நாளை இரவு மீண்டும் கிணற்றுக்குள் வைக்கப்படுகிறார். கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியம் மாறாமல் மருதூர் கிராம மக்களால் ஒற்றுமையாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக ஸ்ரீ செல்லியம்மன் கிணற்றுக்கு உள்ளேயே குடி கொண்டுள்ளார் என்பது சிறப்புமிக்க ஒன்றாகும். இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment