கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவில் மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடும் பாரம்பரிய திருவிழா இரண்டு தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து முதல்நாள் மற்றும் இரண்டாம் நாள் சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு நகரில் உள்ள அனைத்து வீதிகளிலும் வலம் வந்து ஸ்ரீ மகா காளியம்மன் சக்தி கரக வடிவாய் பக்தர்களுக்கு காட்சி தந்து அருளாசிகளை வழங்கினார்.
இந்நிலையில் மூலவர் ஸ்ரீ மகாகாளியம்மனை குளிர்வித்து கோவில் திரும்பும் நிகழ்வான நிறைவு மஞ்சள் நீராட்டுத் திருவிழா நடைபெற்றது. வீதிகள், குடியிருப்புப் பகுதிகள் என அனைத்து இடங்களுக்கும் சக்தி கரகமாக ஸ்ரீ மகா காளியம்மன் வீதியுலா சென்று பக்தர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அருளாசிகள் வழங்கினார். இதில் வேண்டுதலோடு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பெருந்திரளான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment