கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேட்டுத் தெருவில் மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வருடாந்திர பாரம்பரிய விழா இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியது. காப்புக் கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கோவில் வளாக முகப்பில் சக்தி கரகம் ஜோடித்தல் மற்றும் சக்தி கரகம் துள்ளல் ஆட்டம் நடைபெற்று ஸ்ரீ மகாகளியம்மன் சக்தி கரக வடிவமாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருளாசிகளை வழங்கினார்.
பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் இந்தப் பாரம்பரிய விழாவில் இரவு 11 மணிக்கு மேல் துவங்கிய சக்தி கரகம் வீதியுலா சேத்தியாத்தோப்பு அனைத்து முக்கிய வீதிகளின் வழியாக துள்ளல் ஆட்டத்துடன் நடைபெற்று அதிகாலையில் மீண்டும் கோவிலுக்குத் திரும்பியது. இந்த சக்தி கரக வீதியுலா நிகழ்ச்சியின் போது அந்த நள்ளிரவு நேரத்திலும்பெருந்திரலான பக்தர்கள் பங்கேற்று சக்தி கரக வடிவமாக காட்சி தரும் ஸ்ரீ மகாகாளியம்மனை வணங்கி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment