புவனகிரியில் பல குற்ற வழக்குகளுக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 May 2024

புவனகிரியில் பல குற்ற வழக்குகளுக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.


கடலூர் மாவட்டம் புவனகிரி புதுத் தெருவை சேர்ந்தபாலாஜி(23) என்பவர் கடந்த மாதத்தில் அருகில் உள்ள தலைக்குளம் கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது புவனகிரி, வடலூர் காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்கு மற்றும் கஞ்சா வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில்  பாலாஜியின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு ஓர் ஆண்டு காலம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

No comments:

Post a Comment

*/