புவனகிரியில் கழிவு நீரால் மண்ணரிப்பு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்தது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 May 2024

புவனகிரியில் கழிவு நீரால் மண்ணரிப்பு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்தது.

கடலூர் மாவட்டம் புவனகிரி கடைத்தெருவில் ரகுபதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் சுவர் ஓரமாக கடந்த சில மாதங்களாக புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் திறந்த வெளி சாக்கடை மற்றும் கழிவு நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது.  


கழிவு நீரைதொடர்ந்து வெளியேற்றுவதால் ரகுபதியின் வீட்டு சுவர் சேதமடைந்து வந்தது. அவ்வப்போது இதனை சரி செய்ய வேண்டும் என புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்திலும் கோரிக்கை வைத்து வந்ததாகக் கூறுகின்றனர். இந்நிலையில்  இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையின் காரணமாகவும் தொடர்ச்சியான கழிவுநீர் செல்வதாலும் வீட்டின் சுவரில் மண்ணரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதில் ரகுபதியின் தாயார் அமுதா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கும்போது திறந்தவெளி கழிவுநீர் வெளியேறுவதால் அதனால் சுவற்றில் மண் அரிப்பு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது எனவும், சேதமடைந்துள்ள வீட்டின் சுவற்றை புதிதாக அமைத்து தர வேண்டும் என்றும்மேலும் இப்பகுதியில் வெளியேற்றப்படும் திறந்தவெளி சாக்கடை மற்றும் கழிவு நீர் வாய்க்காலை சரியான கட்டமைப்பு ஏற்படுத்தி வெளியேற்ற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ரகுபதி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

.  

No comments:

Post a Comment

*/