வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச அமைப்பதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு சன்மார்க்க சங்கம் சார்பாக நன்றி அறிவிப்பு கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 May 2024

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச அமைப்பதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு சன்மார்க்க சங்கம் சார்பாக நன்றி அறிவிப்பு கூட்டம்.


கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலாரின் புகழை பரப்பும் வகையில் சர்வதேச மையம் அமைப்பதற்காக தமிழக அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில் வள்ளலாரின் புகழை உலக அறியச் செய்யும் வகையில் சர்வதேச மையம் அமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வடலூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநில தலைமை சன்மார்க்க சங்கம் தலைவர் அருள் நாகலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சன்மார்க்க சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர் மேலும் இக்கூட்டத்தில் வள்ளலார் 200 வது அவதார விழாவை முன்னிட்டு 52 வாரங்கள் நடைபெற்ற விழாவிற்கும் வள்ளலார் அவதரித்த திருநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கும் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் ஒருபுறம் வள்ளலாருக்கு நிலம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தலைமை சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற கூட்டம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த ஏராளமான சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

*/