கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பைபாஸ் சாலை அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று இருந்து வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து விவசாய பணிகளுக்கான மின்சாரம் வழக்கமாக செல்கிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மேலே ஏறி டிரான்ஸ்பார்மர் உள்ளே இருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காயிலை திருடிச் சென்றுள்ளனர்.
பல சம்பவங்களில் டிரான்ஸ்பார்மர் எங்கேயாவது கழட்டி வைக்கப்பட்டு இருக்கும். அப்போது மர்மநபர்கள் அதனை உடைத்து காயில்களை திருடிச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே செயல்பட்டுக் கொண்டிருந்த டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மர்மநபர்கள் சர்வ சாதாரணமாக காயில்களை திருடிச் சென்றிருப்பதைப் பார்த்து இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கரண்ட் ஷாக் அடித்தது போல அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தச் செயலை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டித்தால் மட்டுமே இனி ஒரு முறை இப்படி நடக்காமல் இருக்கும் என்று இப்பகுதி மக்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment