நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று உடன் நிறைவு பெற உள்ளது இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்கொழுந்திற்கு முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க இறுதி கட்ட பிரச்சாரமாக, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடலூருக்கு வேட்பாளர் சிவக்கொழுந்து அவர்கள் வருகை தந்தார்.
அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர். ராஜேந்திரன் தலைமையில், ஆயிரக்கணக்கான அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் அதிமுக ஆதரவு பெற்ற சின்னமான தேமுதிகவின் முரசு சின்னத்திற்கு கொட்டும் முரசு முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
நிகழ்வில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், நெய்வேலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன், அதிமுக வடலூர் நகர செயலாளர் சி.எஸ் பாபு தேமுதிக வடலூர் நகர செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தனுஷ்.
No comments:
Post a Comment