ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வேனில் நான்கு காவலர்கள் மற்றும் தேர்தல் வாக்குச்சாவடி பார்வையாளர்கள் உடன் செல்ல வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் ஆறு பணியாளர்கள், மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு சாவடிகளில் ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ளிட்ட 103 வகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 283 வாக்கு சாவடிகளில் கூடுதலாக 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மொத்தம் 24 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்திற்கு இரண்டு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் செல்லப்படுகிறது. சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கூடுதல் கண்காணிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. புவனகிரி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 1600 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
No comments:
Post a Comment