சேத்தியாத்தோப்பு அருகே குளிக்கச் சென்ற அண்ணன் தம்பிகள் குளத்து நீரில் மூழ்கிஉயிரிழப்பு. கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 April 2024

சேத்தியாத்தோப்பு அருகே குளிக்கச் சென்ற அண்ணன் தம்பிகள் குளத்து நீரில் மூழ்கிஉயிரிழப்பு. கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன்களான திலீப்ராஜ்(16),  தினேஷ்(14) ஆகியோர் வெளியூரில்   ஹாஸ்டலில்தங்கி படித்து வந்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். பாட்டி வீட்டில் தங்கி இருந்த நிலையில்  இவர்கள் இன்று அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி இருவருமே எதிர்பாராமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனை எதேச்சையாக கண்டகிராம மக்கள் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கி அவர்களை  மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் இறந்த இரண்டு சிறுவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன், தம்பிகள் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் நந்தீஸ்வரமங்கலம் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/