கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை குமர கோவில் அருகே அதிமுக பரங்கிப்பேட்டை பேரூர் சார்பில் பரங்கிப்பேட்டையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதினால் வாகன ஓட்டிகள். சாலை ஓரம் கடை வைத்திருப்பவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் கோடைகால நீர் மோர் பந்தலை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் இன்று திறந்து வைத்து பொதுமக்கள் அனைவருக்கும் நீர்மோர். இளநீர். தர்பூசனை போன்ற பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம். பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள்.கிள்ளை நகர செயலாளர் தமிழரசன். சந்தர் செல்வி ராமஜெயம்.நகர அவைத் தலைவர் மலை மோகன். 5 வது வார்டு செயலாளர் எஹியா மரைக்காயர்.6 வது வார்டு செயலாளர் காமில். 10 வது வார்டு செயலாளர் ஹாமிது.கழக நிர்வாகிகள். கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment