கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை, இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்ட போது, நகராட்சி அலுவலக பணிகளை, தற்காலிகமாக நகராட்சிக்கு சொந்தமான அண்ணா மண்டபத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய நகராட்சி கட்டிடம் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆன நிலையில், ஏற்கனவே தற்காலிகமாக செயல்பட்டு வந்த அண்ணா மண்டபத்தில், நகராட்சிக்கு சொந்தமான கோப்புகள் அனைத்தும் கேட்பாரற்று, படிக்கட்டில், குப்பைகள் போல் சிதறி கிடப்பதை நகராட்சி ஆணையரும் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என வடலூர் பகுதி வாழும் மக்கள் குற்றம் சாட்டிக்கின்றனர்.
நகராட்சிக்கு சொந்தமான கோப்புகளை கூட முறையாக பராமரிக்க முடியாத அதிகாரிகள், வடலூர் நகரில் வாழும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment