கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும் ஆவணங்களை பரிமுதல் செய்து விசாரணை செய்து வந்த கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் அதிகாரிகள் அந்தப் பணம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் செயல் அலுவலராக இருந்து வரும் சீனிவாசன் என்பவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு கணக்குத் தணிக்கை செய்ய வந்த அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என்று கண்டறியப்பட்டது.
இன்று அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன்(56), உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி (55), உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி (43), ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment