மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் கடந்த 1944 வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று பெரும் தீ விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த சுமார் 66 தீயணைப்பு பணியாளர்கள் உயிரிழந்தனர் இதனை நினைவு கூறும் விதமாக இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி தீ தொண்டு நாள் விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீ தொண்டு நாள் விழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார், கடலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய பணியாளர்கள் தீ தொண்டு நாள் விழாவை முன்னிட்டு வடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வடலூர் போக்குவரத்து பணிமனை ஆகிய பகுதியில் தீ தடுப்பு முறைகள் மற்றும் தீயில் இருந்து எப்படி பாதுகாப்பாக நம்மை காத்துக் கொள்வது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
No comments:
Post a Comment