தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 April 2024

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் புலியூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனது சொந்த கிராமத்தில் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

 

மத்திய பாஜக அரசு சட்ட வரம்பு மீறலை செய்து வருகிறது. தேர்தல் அறிவித்த பிறகு அனைத்து துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் ஆனால் பாஜக சர்வாதிகார போக்கில் வருமான வரித்துறை, அமலாக்க துறை போன்றவற்றை தூண்டிவிட்டு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளவன் இல்லம், கடலூர் மேயர் மற்றும் திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்காக மிக சிறந்த முடிவுகளை தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் மக்கள் இன்ப அதிர்ச்சியாக கொடுப்பார்கள் என கருதுகிறேன்.


சில பகுதிகளில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்களிப்பதை புறக்கணிப்பது அவர்களின் விருப்பம் அந்த முடிவை யாரும் திணிக்க முடியாது என தெரிவித்தார்.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.

No comments:

Post a Comment