ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ ஆதிவராக நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப்பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி மேலாண்மைக்குழு தலைவி, ஆஷா தொடங்கி வைத்தார் ஆசிரியர் பயிற்றுனர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சிவகாமி அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் உள்ள பயன்களை எடுத்துக் கூறினார்.
மாணவர்கள் அரசு பள்ளியின் நலத்திட்டங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துக்கொண்டு கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக முழக்கமிட்டு வந்தனர். ஊர் பொதுமக்களில்பலர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் அருள் வடிவேலன், மாலதி, அபிஷேகாயர்,அருள் மேரி ஆகியோர் இந்த விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment