சேத்தியாத்தோப்பு அருகே மும்முடி சோழகனின் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி வீடுகளில் கருப்புக்கொடி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 April 2024

சேத்தியாத்தோப்பு அருகே மும்முடி சோழகனின் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி வீடுகளில் கருப்புக்கொடி.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மும்முடி சோழகன் கிராமத்தில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு தங்களதுநிலம் மனைகளை கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை முழுமையான இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகள்  கிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து இதற்காக  கிராம மக்கள் போராடி வருகின்றனர். மேலும் தற்போதைய நிலையில் கிராமத்தில் கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. அன்றாடம் பயன்படுத்தும்  குடிநீரை நீண்ட தூரம் சென்று எடுத்து வர வேண்டிய நிலையும் உருவாகி உள்ளது என இக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை என நினைத்துவருகின்ற ஏப்ரல்19, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக  கூறி, வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், தேர்தல் புறக்கணிப்பு டிஜிட்டல் பேனரை வைத்தும் மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது எதிர்ப்பை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டு முழுமையான தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர். 

No comments:

Post a Comment

*/