கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரம் உள்ளது. இந்தப் பகுதி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கே நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.கடந்த மூன்று ஆண்டு காலமாக சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சோழத்தரத்தில் உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக என்எல்சி நிலக்கரி கழிவு மணலை கொண்டு வந்து பாலத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்தப்படும் நிலக்கரி கழிவு மண் வெறுமனே கொட்டப்படுவதால் இதனைக் கடந்து செல்லும் வாகனங்களால் காற்றில் புழுதி பறந்துவருகிறது. இந்த நிலக்கரிக் கழிவு மண் புழுதி காற்றில் கலப்பதால் அவ்விடத்தில் உள்ளகுடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அருகில் உள்ள உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண முடியாத அளவுக்கு காற்றோடு சேர்ந்து புழுதி பறக்கிறது என இப்பகுதியினர் மற்றும் பொதுமக்கள்தெரிவித்து வருகின்றனர்.
உயரதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு எவ்விதத்திலும் அசாதாரண நிலைமையை ஏற்படுத்தாமல் சாலை அமைக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் எனவம் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment