அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்க வந்த, பத்திரிக்கையாளர் ஒருவரை காவல் துறையினர் தாக்குவதாக கூறி, வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில், வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியான வீடியோவில், காவல்துறையினர் ஒருவரை கடுமையாக தாக்கியப்படியே இழுத்துச் செல்லும் வீடியோ பதிவாகியுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, செல்போனில் படம் பிடிப்பவர்களின் செல்போன்களை காவல்துறையினர் பறித்துக் கொள்வாக வீடியோவில் சொல்லப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில், வேகமாக பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபொழுது தான் ஒரு சமூக அலுவலர் என்றும் கடந்த 35 ஆண்டுகளாக வடலூர் விடியல் சேவை அமைப்பு என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு நடத்தி வருவதாகவும் சன்மார்க்க அன்பர்களின் அழைப்பை ஏற்று நான் அங்கு சென்று வீடியோ எடுக்க முயன்ற போது முன்விரோதம் காரணமாக வடலூர் காவல் துறையை சேர்ந்த காவலர் ஒருவர் என்னை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் எனது கைபேசி உடைந்தது என தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு சமூக ஆர்வலர்களின் நலன் கருதி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் இது போன்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment