இதற்கு பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பெருவெளியில் சர்வதேச மையத்தை அமைக்க கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது, இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச மையம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைக்காமல் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டு அதில் அமையுங்கள் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதில் சுமார் 27 பேரு மீது வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பார்வதிபுரம் பகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் வாக்கு சேகரித்தார் அப்பொழுது பார்வதிபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அவர்கள் சர்வதேசம் மையம் அமைக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது தேர்தல் முடிந்தவுடன் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதன் பேரில் தொடர்ந்து பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பார்வதிபுரம் கிராம மக்களின் கருத்து கேட்பு கூட்டம் இன்று வடலூரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நெய்வேலி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா பொதுமக்கள் மத்தியில் சர்வதேச மையம் எப்படி அமைக்கப்பட உள்ளது என்ற விபரங்களை வரைபடம் மூலம் விளக்கி கூறினார்.
மேலும் கூட்டத்தின் பொழுது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர் அப்பொழுது கூட்டத்தில் வடலூர் பார்வதிபுரம் பகுதியில் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் சர்வதேச மையம் அமைப்பதற்கான நில அளவீடு செய்யும் பொழுது வள்ளலார் சபை பெருவெளி எதிரே உள்ள வள்ளலார் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தனி நபர் ஆகிரமித்து வைத்துள்ளார்.
அளவிட்டின் பொழுது அளவுகள் அனைத்தும் பெருவழியை தாண்டி வந்தது இதனை வள்ளலார் சத்திய ஞான சபை நிலை அலுவலர் ஏன் மறைக்கிறார் என்று கேள்வி எழுப்பினார், இதனை அனைவரும் வீடியோ பதிவு செய்ய முற்பட்ட பொழுது இதற்கு பதில் கூறாமல் நிலை அலுவலர் அதிகாரிகள் முன்பு திணறினார்.
வள்ளலார் சத்ய ஞான சபைக்கு கிராம மக்கள் வழங்கிய 106 ஏக்கரில் தற்பொழுது 65 ஏக்கர் மட்டுமே உள்ளது மீதமுள்ள 41 ஏக்கர் பெருவழிக்கு வெளியே உள்ள கோவிலுக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் வழங்கிய இடங்கள் அனைத்தும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜோதி தரிசனத்தின் போது அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடும் இடமாக பெருவிழி திகழ்கிறது.
தற்பொழுது உள்ள 65 ஏக்கரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மேற்கொண்டால் வருங்காலங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் எனவும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள 41 ஏக்கரை மீட்டு அதில் சர்வதேச மையத்தை அமைத்தால் பெருவளி மக்கள் பயன்பாட்டிற்கு முழுவதுமாக கிடைத்து விடும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் சர்வதேச மையம் அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்வதில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை ஆனால் திட்டம் குறித்த விளக்கங்களை எங்களுக்கு முழுமையாக இன்று வரை தெரியப்படுத்தப்படவில்லை, மேலும் வடலூர் பகுதியில் மதுக்கடைகளையும் மாமிச கடைகளையும் அகற்றக் கோரி சன்மார்க்க அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இதை குறித்து இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளாத போது சர்வதேசம் மையம் அமைப்பதில் தீவிரம் காட்டுவதில் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினார்
மேலும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கடலூர் மாவட்ட அமைச்சர் அவர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டமானது வள்ளலார் சபை வளாகத்தில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர், இச்சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment