கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் பெருவெளியில், சர்வதேச வள்ளலார் மையம் அமைப்பதற்காக ஆளும் விடியா திமுக அரசு, கடந்த மாதம் அடிக்கல் நாட்டி, கட்டுமான பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வள்ளலார் பெருவெளி அமைவதற்கு நிலங்களை தானமாக கொடுத்த பார்வதிபுரம் மக்கள் மற்றும் வள்ளலார் ஆன்மீக பக்தர்கள் சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களது எதிர்ப்பை மீறியும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நிறுத்தப்பட்டிருந்த கட்டுமான பணியை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பார்வதிபுரம் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வடலூர் வள்ளலார் பெருவெளியில் சர்வதேச வள்ளலார் மையத்தை கட்டக் கூடாது எனவும், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் வடலூர் பெருவெளியை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை, தமிழக அரசும் இந்து அறநிலைத்துறையும் மீட்டு, அவ்விடத்தில் சர்வதேச வள்ளலார் மையத்தை கட்டிக் கொள்ளுமாறு பார்வதிபுரம் மக்கள் ஒருமித்த கருத்தாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment