முன்னதாக கள்ளழகர் வடிவம் கொண்ட கருப்பசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கள்ளழகர் குதிரை வாகனத்தில் ஏறி தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று அருகில் இருக்கும் வடவாற்றில். இறங்கி புனித நீராடினார். இதன் பின்னர் ஆற்றில் அமர்ந்திருந்த கள்ளழகருக்கு அபிஷேகம் செய்தும், மகா தீபாராதனை காட்டியும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி அபிஷேகம் செய்தனர்.
இதன் பின்னர் கள்ளழகர் மேலே தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர். பின்னர் கள்ளழகர் வடவாற்ற்றில் இருந்து தனது இருப்பிடம் செல்லும் ஊர்வலத்தின் போது அங்கிருந்த பெண்கள், சிறுமிகள் உற்சாகமாக நடனமாடி தெருக்களில் வரவேற்று பின்னர் சுவாமி சன்னிதியை வந்தடைந்தது. முன்னதாக அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரருடைய திருக்கல்யாண வைபோகமும் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விழாவினைக் கண்டு களித்தும் சுவாமியை வணங்கியும் அருளாசி பெற்றனர்.
No comments:
Post a Comment