ஏழைகளின் சுக துக்கத்தில் பங்கு கொள்ளவதை நினைவு கூறும் விதமாகவும் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாகவும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் நேற்று பிறை தென்பட்டது அடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படடுகிறது.
வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் வடலூர் இத்கா மைதானத்தில் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினார், இதனைத் தொடர்ந்து உலக அமைதி வேண்டியும் , சமத்துவம் சகோதரத்துவம் நிலைநாட்டவும், பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இக்தா மைதானத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வடலூர் பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அனைவரும் புத்தாடை அணிந்து ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். நிகழ்வில் வடலூர் ஜமாத் செயலாளர் S.சையத் அப்தாகீர்,M.பஷீர் அகமது k.ஜமால் மைதீன்,I.அப்துல் ஹமீது, கேப்டன் பஷீர், S.ஜாகிர் உசேன் கவுன்சிலர் S.ஷாகுல் ஹமீத்,M. ஆசிப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.
No comments:
Post a Comment